விற்பனை!

செல்வத்தை ஈர்க்கும் ரகசியம்

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பணக்காரனாக இருக்க விரும்புகிறான், நம் அனைவருக்கும் அதற்கான ஆற்றல் உள்ளது. அப்படியானால், நாம் பணக்காரர்களாக மாறுவதற்குத் தடையாக இருக்கும் காரணிகள் யாவை? "நம்முடைய எதிர்மறை எண்ணங்களே நம்மை பணக்காரர் ஆவதைத் தடுக்கும் தடைகள்" என போதி பிரவேஷ் எடுத்துரைக்கிறார். இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து துடைத்து, அனைவரும் பணக்காரர்களாக மாறுவதற்கு இந்த “செல்வத்தை ஈர்க்கும் ரகசியம்” புத்தகம் உதவும்.

பக்கங்கள் : 336
கிடைக்கும் பேப்பர்பேக்
மொழி தமிழ்

விளக்கம்

நீங்கள் ஒரு செல்வந்தராக இருக்க விரும்புகிறீர்கள்; நீங்கள் மற்றவர்களிடமிருந்து அங்கீகாரம் பெற விரும்புகிறீர்கள். நீங்கள் புகழுடன் வாழ விரும்புகிறீர்கள். இந்த புத்தகத்தை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதே உங்கள் எல்லா விருப்பங்களுக்கும் ஆதாரம்.

உங்களுக்கு நியாயமான ஆசைகள் மட்டுமே உள்ளன. மனிதனிடம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டால், அவன் சோம்பேறியாகி, தனக்கு மட்டுமல்ல சமுதாயத்துக்கும் சுமையாகி விடுகிறான்.

மனித ஆசைகள் அனைத்தும் ஒவ்வொருவருக்குள்ளும் ரகசியமாக உறைந்து கிடக்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அது நிறைவேறுகிறதா என்று பார்த்தால், அதிகபட்சம் ஐந்து சதவிகிதம் மக்களின் விருப்பங்கள்தான் நிறைவேறுகின்றன. தொண்ணூற்றைந்து சதவிகித மக்கள் தங்கள் ஆசைகளை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாத ஏக்கத்தில் வாழ்ந்து இறக்கிறார்கள். ஆனால் நீங்கள் இந்தக் கலையைக் கற்கப் போவதால் உங்கள் விருப்பங்களை யதார்த்தமாக மாற்றப் போகிறீர்கள்.
உங்கள் மனதை சில நோய்களில் இருந்து காப்பாற்றினால் போதும், உங்கள் மனமே உங்களை பணக்காரராக்கும். எனவே, மன நோய்களில் இருந்து மனதை மீட்கும் நுண்ணறிவு, செல்வத்தை உண்டாக்கும் சிறப்பு அறிவு ஆகியவற்றை இந்நூலில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்!

மின் புத்தகங்களைப் பதிவிறக்கவும்

Reviews

There are no reviews yet.

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன