விளக்கம்
மனம் என்பது நம் பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சூழலால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கருவி. வாழ்வின் முதல் ஏழு வருடங்களில் நம் மனம் உருவாக்கப்படுகிறது. நம் மனதில் கோடிக்கணக்கான பாதைகள் உருவான காலம் அது. ஏழு வயதிற்குப் பிறகு மனம் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதைகளில் தானாகவே பயணிக்கத் தொடங்குகிறது.
மனதின் சிந்தனை நிலை ஏற்கனவே நிறுவப்பட்ட மென்பொருளின்படி மட்டுமே இருக்கும். உதாரணத்திற்கு, “என்னால் இவ்வளவுதான் முடியும்” என்ற மென்பொருள் ஏற்கனவே மனதில் பதியப்பட்டிருந்தால், அந்த வரம்புக்கு அப்பால் மனமதால் எதையும் சிந்திக்க முடியாமல் போய்விடும். ஆனால், அதே நேரத்தில் "என்னால் எதையும் சாதிக்க முடியும்" என்ற மென்பொருள் நிறுவப்பட்டிருந்தால், அந்த மனதின் சிந்திக்கும் திறன் வரம்பற்றதாகிறது.
எவ்வளவு பழைய கணினியாக இருந்தாலும், மென்பொருளை மாற்றும்போது அதன் செயல்பாடு மாறுகிறது. அதே போல, "பணக்காரன் ஆவதற்கான கலை" என்ற மென்பொருளை மனதில் பதிந்து கொண்டால், உன் மனம் நிச்சயமாக உன்னை பணக்காரனாக்கும். இந்தப் புத்தகம் அந்த வேலையை அருமையான முறையில் செய்கிறது.
மின் புத்தகங்களைப் பதிவிறக்கவும்
|
|
|
|
|
Reviews
There are no reviews yet.